இலங்கைக்கான சீன தூதுவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.
சீன தூதுவர் வட மாகாணத்திற்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சக்கோட்டை முனைக்கு தனிப்பட்ட விடயமாக வந்துசென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.