தெலங்கானாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சுயமரியாதை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முதலமைச்சராக்கியதே இல்லை என்று குற்றம் சாடியுள்ளார்.
தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முதலமைச்சராவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். அப்போது தொண்டர்கள் தொலைபேசியில் டார்ச்சை ஒளிரவிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு மோடி அழைப்பு விடுத்தார்