இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் செய்துள்ளதாக தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 977 இலங்கையர்கள் மற்றும் 2468 வெளிநாட்டவர்கள் 3445 பேருக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கண் மருத்துவ சங்கத்தின் செயலாளர் சம்பத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் 606 கண்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 118 பேருக்கு இந்நாட்டிலும் 326 வெளிநாட்டவர்களுக்கும் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உள்ளூர் நன்கொடையாளர்களால் கண்கள் வழங்கப்படுவது பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் அதிக தேவை காரணமாக இருப்பதாகவும், இலங்கையில் கண்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் கண் சிகிச்சை சங்கத்தினால் கடமையாற்றப்பட்டுள்ள தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, நாட்டின் சனத்தொகையில் பத்து வீதத்திற்கும் அதிகமான மக்கள், அதாவது இருபத்து இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது கண்களை ஒளிர வைப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார