கலிபோர்னியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்துள்ளார்.
ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான இந்த சந்திப்பு நடபெற்றிருக்கி;ன்றது.
இந்த சந்திப்பில், உலகப் போர் மோதல்கள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள், போதைப்பொருள் கடத்தல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நெருக்கடிகள் குறித்து இரு தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த அம்சங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தணிக்க இந்தக் கலந்துரையாடல் உதவியதாக உலக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் போட்டி நிலவினாலும் அது மோதலாக உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், வல்லரசு நாடுகளாக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பேணுவதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்க ஜனாதிபதி சீன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சீன ஜனாதிபதி, அமெரிக்கா-சீனா உறவுதான் உலகின் மிக முக்கியமான இருதரப்பு உறவு என்று கூறியுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.