சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 850 குடும்பங்களை சேர்ந்த 2,910 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தில் 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்துடன் அதிகபட்சமாக சங்காணையில் 279 குடும்பங்களும், கோப்பாயில் 234 குடும்பங்களும், கரவெட்டியில் 180 குடும்பங்களும், பருத்தித்துறையில் 58 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.