• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரைக் குறிவைக்கும் அவுஸ்திரேலிய நிறுவனம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/16
in இலங்கை, மன்னாா், வட மாகாணம்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

”மன்னாரில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக” வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவு பகுதிக்குள் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகின்றது.

இது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றோம். இந்த நிலையில் அண்மையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அமைச்சின் அழைப்பின் பேரில் பல்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மன்னார் தீவு பகுதிக்குள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அறிந்தோம்.

அன்று நாடாளுமன்ற தினம் என்பதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. அதே நேரம் அன்றைய நாள் நான் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னார் தீவினுடைய நிலப்பரப்பும் மன்னார் கடல் நிலப்பரப்பின் அமைவும் சம அளவாக இருப்பதால் இங்கு அகழ்பணி மேற்கொண்டால் தீவு அழிந்து போகும். எனவே வந்திருக்கும் அதிகாரியிடம் இதை தெரிவிக்கும் படியும் இங்கே அகழ்வு பணியை மேற்கொள்ள மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி கிடைக்காது எனவும் நாடாளுமன்ற  உறுப்பினர்களின் எதிர்ப்பு இருப்பதால் இதை நடைமுறைப்படுத்த முடியாது என்ற தகவலை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு தெரிவித்திருந்தேன்.

இதற்கு அடுத்த நாள் நேரடியாக நான் கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து இந்த மணல் அகழ்வு தொடர்பாகவும் மணல் அகழ்வுக்கான ஆய்வு தொடர்பாகவும் எனது 100 வீத எதிர்ப்பை தெரிவித்த போது ஆளுநர் அதற்கு இணங்கி இருந்தார்.

அத்துடன்  இந்த முயற்சியை இந்த நிறுவனம் கைவிட வேண்டும் அரசாங்கத்துக்கும் தொடர்ச்சியாக நாங்கள் கூறி வருகிறோம். எங்களுடைய தீவு பகுதிக்குள் எந்த விதமான ஆராய்ச்சியோ அகழிப்பணியோ மேற்கொள்ள வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்” இவ்வாறு சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: mannar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்!

Next Post

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

Related Posts

கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!
இலங்கை

2026-06-01
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!
மலையகம்

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

2026-06-01
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!
இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

2026-06-01
85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
இந்தியா

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-01
Next Post
கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

0
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

0
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

0
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

0
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

0
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

2026-06-01
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

2026-06-01
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

2026-06-01
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

2026-06-01
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

2026-06-01

Recent News

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

2026-06-01
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

2026-06-01
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

2026-06-01
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

2026-06-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.