காசா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா செய்தி பிரிவு இதனை அறிவித்துள்ளது. இருப்பினும், அல் ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமில்லை என்று கூறுகின்றனர்.
இதனிடையே, தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.