செங்கடலில் சரக்கு கப்பலை கடத்திய ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் செய்து வரும் கொடூரமான செயல்களுக்கு பதிலடியாக, துருக்கியில் இருந்து இந்தியா வந்த போது ஏமன் கிளர்ச்சிக் குழு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் கப்பல் கைப்பற்றப்பட்டதை கடுமையாக கண்டிப்பதாகவும் கப்பல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்க கிளர்ச்சியாளர்களை மத்திய கிழக்கு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைத்து அதற்கான தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து எடுக்கும் என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.