குறைந்தது 12 பேரைக் கொன்ற மற்றும் பலரைக் காயப்படுத்திய காசாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலை மீதான இஸ்ரேலின் கொடிய தாக்குதலை கட்டார் அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த தாக்குதல், சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் குறிப்பாக ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகவும் கட்டார் அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும் காசா பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் செய்ததாகக் கூறப்படும் இந்த குற்றங்களை விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.