தமிழ்நாடு கோவை அம்பராம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் தனது முச்சக்கரவண்டியை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
அங்கு மதுபோதையில் வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்; பைசல் என்பவர் “யாருடா பஞ்சாயத்துத் தலைவர் என்ன கேட்காமல் இங்கு வண்டியை நிறுத்தினது” என்று தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.
அத்துடன் முச்சக்கரவண்டியில் நான்கு சக்கரங்களிலும் இருந்த காற்றைப் பிடுங்கி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு வந்த இளையராஜா “எதற்காக வண்டியில் காற்றைத் திறந்து விட்டீர்கள்” எனக் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த பைசல் அவரை தகாத வார்த்தைகள் திட்டி பலமாகத் தாக்கி நெஞ்சு பகுதியில் கடித்துள்ளதாக கூறப்படுகிறது
இதில் பலத்த காயமடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இளையராஜா ஆனைமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் வைத்துத் தாக்கி காயப்படுத்தியது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பைசலை கைது செய்து பொள்ளாச்சி கிளைச் சிறையில் வைத்துள்ளனர்.