பொலிஸ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அண்மையில் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 20 இற்கும் மேற்பட்டோர் பொலிஸ் விளக்கமறியலில் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11 ஆம் திகதி குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.