தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விடயம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் மனு அனுப்பி உள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.
இதையொட்டி, கடந்த 22-ம் திகதி ராஜஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து வெளிவிட்டதாக பாஜக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது 3 பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் மனு அனுப்பியுள்ளது.