மேல்இ தென் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நுளம்புகள் பெருகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.