பராமரிப்பு பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அண்மையில் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.