மெட்ரோ வங்கியின் பங்குதாரர்கள், வங்கியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மீட்பு ஒப்பந்தத்தை ஆதரிப்பதா என்பது குறித்து பின்னர் வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோவின் நிதி நிலை குறித்த ஊகங்களுக்குப் பிறகு, முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி திரட்டுவதற்கும், மறுநிதியளிப்புக் கடனுக்கும் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனிடையே, திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று வங்கி கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், மெட்ரோ, பாங்க் ஒஃப் இங்கிலாந்தால் ‘சாத்தியமற்றது’ எனக் கருதப்பட்டு, தோல்வியுற்ற வங்கிகளை நிர்வகிப்பதற்கான செயல்முறையில் ஈடுபடலாம் என்று எச்சரித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் 325 மில்லியன் பவுண்டுகள் புதிய நிதி மற்றும் 600 மில்லியன் பவுண்கள் கடனுக்கு மறுநிதியளிப்பு ஆகியவை அடங்கும்.
கொலம்பிய பில்லியனர் ஜெய்ம் கிலின்ஸ்கி பேகல் 53 சதவீத பங்குகளுடன் மெட்ரோவின் கட்டுப்பாட்டு பங்குதாரராக மாறுவார். அவரது நிறுவனம், ஸ்பால்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ், 102 மில்லியன் பவுண்டுகளை வங்கியில் செலுத்துகிறது.
கடந்த மாதம் மறுநிதியளிப்பு ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு, மெட்ரோவின் தலைமை நிர்வாகி டேனியல் ஃப்ரம்கின், இது வங்கிக்கு ‘ஒரு புதிய அத்தியாயம்’ என்று கூறினார்.