ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனின் நகரில் இதே சம்பவத்தின் போது எட்டு வயது ஆடம் அல்-கோல் மற்றும் 14 வயதான பாசல் அபு அல்-வஃபா ஆகியோர் சுடப்பட்டதைக் காட்டும் சி.சி.ரி.வி. கெமரா காட்சிகள் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர்கள், தங்கள் வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியதாகவும், அதற்கு அவர்கள் நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.
இந்த சோதனையின் போது துருப்புக்கள் ‘இரண்டு உயர்மட்ட பயங்கரவாதிகளை’ கொன்றதாகவும் அது கூறியது.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலால் தூண்டப்பட்ட காசா பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இந்த சோதனையின் போது தேடப்பட்ட 17 நபர்களை கைது செய்துள்ளதாகவும் ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.