ஈரானிய இராணுவத்தின் நலனுக்காக சட்டவிரோத நிதி வலையமைப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 21 ஈரானியர்கள், வெளிநாட்டினர் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்துள்ளது.
ஈரான் அதன் சீர்குலைக்கும் பிராந்திய நடவடிக்கைகளுக்கும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா உட்பட பல பிராந்திய ப்ராக்ஸி குழுக்களின் ஆதரவிற்கும் நிதியளிப்பதற்காக பொருட்களின் விற்பனை மூலம் பில்லியன் கணக்கான டொலர்களுக்கு சமமான தொகையை ஈட்டுகிறது’ என்று திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிராந்தியம் முழுவதும் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு நிதியை உருவாக்குவதற்கு ஈரான் சட்டவிரோத நிதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது’ என்று பயங்கரவாதம் மற்றும் நிதி உளவுத்துறைக்கான திறைசேரியின் துணைச் செயலாளர் பிரையன் நெல்சன் கூறினார்.
இந்த முக்கியமான நிதி ஆதாரத்தை சீர்குலைப்பதற்காக ஈரானிய இராணுவம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதன் உடந்தையான பங்காளிகளின் கூறுகளை அம்பலப்படுத்த அமெரிக்கா உறுதியாக உள்ளது,’ என்று அவர் மேலும் கூறினார்.
ஹமாஸ் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியதில் இருந்து பிராந்தியம் முழுவதும் ஈரான் ஆதரவு குழுக்களை குறிவைத்து அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.