மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் திருடிய குற்றச் சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருடப்பட்ட டி56 ரக துப்பாக்கி 280,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய இரு சந்தேகநபர்களும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.