அஸ்வெசும பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனது இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 14 இலட்சத்து 6 ஆயிரத்து 932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுக்காக 8 ஆயிரத்து 775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ x-தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீளாய்வு செய்யப்பட்டு அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெறும் ஒவ்வொருவருக்கும், ஜூலை மாதக் கொடுப்பனவில் இருந்து கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.