சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா , சின்ன குழந்தையும் சொல்லும் !
1975 ஆம் ஆண்டு முதல் 48 வருடங்கள் சினிமாவின் ஒற்றை சூரியனாய் ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி காந்த். மராத்தியை தாய்மொழியாக கொண்ட இவர் இன்று தமிழ் மொழியின் மைந்தன் ஆகிவிட்டார்.
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒர சிறு கதாபாத்திரமாக தன் முகத்தை பதிவு செய்தவர் அதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்டால் நடத்துனர் என சொல்வோம் .. அவர் சிகரெட்டை வாயில் வைத்து சுழற்றும் ஸ்டைலுக்காக அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்தது.
தந்தையின் தொழில் காரணமாக தனது இளமை காலத்தை பெங்களுரில் கழித்த சிவாஜிராவ்க்கு சிறுவயது முதலே நடிப்பில் ஆரவம் இருந்தது. ஆவர் திரைப்பட கல்லூரியில் இணைந்து கற்க முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கு அவர் கன்னட மொழியில் நடித்த மேடை நாடகங்களே சான்றாகும். பொருளாதார சிக்கலுக்குள் சிக்குண்ட இவர் நடிப்பு வேண்டாம் என முடிவு செய்ய அவருக்கு அந்நேரத்தில் உதவி திரைப்பட கல்லூரியில் சேர்த்து விட்டவர் அவருடைய நெருங்கிய நண்பர் ராஜ் பஹதூர் . இன்றும் எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரை சந்திக்க முடியும் என்றால் அது ராஜ் பஹதூரால் மட்டுமே முடியும்.
எதிர் நீச்சல் படம் வெளியாகி பெரம் வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்த போது திரைப்பட கல்லூரிக்கு பாலச்சந்தர் வருகை தந்திருந்தார். ஆவரிடம் ரஜினி நடிப்பை தவிர ஒரு நடிகனிடம் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் என கேட்ட போது ஒரு நடிகன் வெளியே நடிக்க கூடாது என கூறியதை இன்றளவும் அவர் கடைப்பிடிக்கிறார்
.
அபூர்வ ராகங்கள் படத்தில் பைரவி எங்கே என கேட்டு அறிமுகமானவர் தனது அயராத உழைப்பால் பைரவி என்ற திரைப்படத்தில் இரண்டே வருடங்களில் கதாநாயகனான அறிமுகமானார். அது வரையில் வில்லனாக தன்னை காட்டிக்கொண்டிருந்தவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே 35 அடி உயர கட்டவுட் வைத்து அனைவரும் அண்ணாந்து பாரக்கும் சூப்பர் ஸ்டாராக பட்டம் பெற்று ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார்.
நான்கே வருடங்களில் 50 படங்களை நடித்து முடித்த ஓர் அற்புத நடிகன் இவர் . 16 வயதினிலே படத்துக்காக 2,500 ரூபாய் சம்பளம் வாங்கிய போது ஒரு நாள் நானும் கமல் போல 30,000 சம்பளம் வாங்குவேன் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார் . ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை இன்று ரஜினிக்கு மட்டுமே உண்டு.
ப்ளக் என்ட வைட் முதல் 3னு வரை….. பாலச்சந்தர் முதல் நெல்சன் வரை ….. எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை இவர் பேசாத வசனங்கள் இல்லை ! அவர் காட்டாத மாஸ் இல்லை ! அவருக்கு வராத விசில்கள் , கைத்தட்டல்கள் இல்லை! சினிமாவில் யாரும் காணா ஒரு உச்ச நட்ச்சத்திரம் இவர்தான். இவருடைய ஸ்டைலை பின்பற்றாத எந்தவொரு நடிகரும் சினிமாவிலும் இல்லை ! சூப்பர் ஸ்டார் இவர் ஒருத்தர் தான் அப்பவும் ….. இப்பவும் ….. எப்பவும்!