நாட்டில் 10 வீதமான ஆண்களும் 90 வீதமான பெண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2022 ஆம் ஆண்டு குடும்ப சுகாதார பணியகத்திற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்.
இவ்வாறு அதிகமான பெண்களே வருகின்றார்கள். எமது தரவுகளின்படி 90 வீதமான பெண்களும் 10 வீதமான ஆண்களும் எமது நிலையத்திற்கு வருகின்றார்கள்.
உடல் ரீதியான துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், பொருளாதார துஸ்பிரயோகம், உளவியல் துஸ்பிரயோகம் என பல்வேறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றார்கள்.
இவ்வாறு வீடுகளில் துஸ்பிரேகத்திற்க உள்ளாகுபவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப சுகாதார பணியகத்திற்கு சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேநேரம் 070 2 611 111 எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கலாம். அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த நிலையங்கள் காணப்படுகின்றன.
நாடளாவிய ரீதியிலும் அனைத்து விசேட நிபுணத்தவ வைத்தியசாலைகளிலும் இந்த நிலையம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.