மும்பை அணியின் தலைவராக செயற்பட்டுவந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அணியின் எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர் முதல் ஹர்பஜன் சிங், ரிக்கி பொண்டிங் முதல் ரோகித் சர்மா வரை அனைவரும் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த குறிக்கோளுக்கு ஏற்ப 2024 ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.