இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்ல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு கே.எல். ராகுலும், தென்னாபிரிக்கா அணிக்கு ஹெய்டன் மார்க்கிரமும் தலைமை தாங்கவுள்ளனர்.
ஏற்கனவே இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தலா ஒவ்வொரு வெற்றியை இரு அணிகளும் பதிவுசெய்துள்ளன.
முதல் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆகவே இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, ஒருநாள் தொடரை வெற்றிக்கொள்ளும். எனவே இரு அணிகளும் இப்போட்டியின் வெற்றிக்கு கடுமையாக போராடும்.
இந்தப் போட்டியின் வெற்றி- தோல்வி எவ்வாறு அமையப் போகின்றது என நாம் பொறுத்திருந்து பார்ப்போம்…