அமெரிக்காவில், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிஸார் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மானுவல் எல்லிஸ் (Manuel Ellis) என்ற 33 வயதான நபர் வொஷிங்டன் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த நபர் பொலிஸார் தாக்கியதினாலேயே உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகளையும் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.