போயா தினமான நேற்று (26) பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த நபரொருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.