”கொழும்பில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கொழும்பில் உள்ள 26 தோட்டங்களில் 61,000க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
இம்மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான புதிய யோசனை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் குறித்த மக்களை குடியமர்த்திய பின்னர் எஞ்சியுள்ள இடங்களை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.