யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி, மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக, மாணவியின் உறவினர்களால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டில் ” அம் மாணவிக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே குறித்த மாணவியின் மரண அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்