தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அழைத்து வரப்பட்டுள்ளார். பரிசோதனைகள் முடிவடைந்ததும், நாளை மறுநாள் வீடு திரும்புவார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சில வாரங்கள் சிகிச்சை பெற்று பின்னர் மீண்டும் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.