சூடானின் அல் ஜசிரா மாநிலத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் யுத்தம் இடம்பெற்றுவரும் இடங்களில் இருந்து 253 சிறுவர்களை மீட்டுள்ள யுனிசெப்ஃ அமைப்பானது அவர்ளை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைத்து பராமரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் சூடானில் உள்ள குழந்தைகளுக்கு அமைதி தேவை எனவும் யுனிசெப்ஃ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் சுமார் 3 மில்லியன் சிறுவர்கள் சூடானில் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.