நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்னர்தம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீட் தேர்வை இரத்து செய்ய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி நீட் விலக்கு நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெற வேண்டும் என்ற இந்த குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இவ்வாறு வாங்கப்பட்டுள்ள 50 இலட்சம் கையெழுத்துக்கள் தமிழ்நாடு அரசு தரப்பால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.