“நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சன நெரிசல் காரணமாக, சிறைச்சாலைகளில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக” சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைக்கு யுக்திய நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொற்று நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறைச்சாலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய ஹேமன்த ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில் ” போதைப் பொருளுக்கு அடிமையாகிய கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளதன் காரணமாக அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலி சிறைச்சாலையில் காய்ச்சல் நோய் அறிகுறி தென்பட்ட 8 கைதிகளை கராபிட்டிய வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர காமினி பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.