பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி, மக்களுக்கு பச்சை அரிசி 1 கிலோ , சர்க்கரை 1 கிலோ , முழு கரும்பு ஒன்று மற்றும் , ரொக்கப்பணமாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசினால் பொங்கலுக்கான பரிசு தொகுப்பு குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு 2 ஆயிரத்து 436 கோடி செலவு என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் ரேஷன் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.