அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளித் தமிழரான விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் மாகாண அளவிலான தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 மாவட்டங்களின் ஆரம்ப கட்ட முடிவுகளில், டொனால்ட் டிரம்ப், 50 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் விவேக் ராமசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.