அணைக்காத சிகரெட் துண்டினால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேளச்சேரியில் பதிவாகியுள்ளது.
சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் வசித்து வந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் புகைபிடித்துவிட்டு, சிகரெட்டினை அணைக்காமல் உறங்கியுள்ளார்.
இந்நிலையில் படுக்கையில் இருந்த சிகரெட் துண்டினால் மெத்தையில் தீ மளமளவௌப் பரவியுள்ள நிலையில் குறித்த நபர் தீயில் கருதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.