நாட்டில் தற்போது 14 அரசியல் கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளார் என்றும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுவதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) வவுனியா வைரவ புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட நீதி அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்
இதேவேளை கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் விசேட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் மூன்று பிரிவுகளாக கந்தக்காடு முகாம் தற்போது இயங்கி வருகின்றதுடன் அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுளார்.















