பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்ததுடன் ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என மருதானை பொலிஸாரின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.