கராப்பிட்டிய வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியருக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” கடந்த 16ஆம் திகதி ,சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் கிரிஷாந்த பெரேராவினால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது இடையூறு ஏற்பட்டது.
இது தொடர்பில் வைத்திய நிபுணர் பெரேரா உரிய பிரிவுக்கு அறிவித்திருந்தார். இதற்கு எதிராக கடந்த 17ஆம் திகதி சுகாதார பணியாளர்கள் குழுவொன்று வைத்தியர் கிரிஷாந்த பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். எனவே குறித்தவிடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.