நாட்டில் கடந்த சில நாட்களாக 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ ஒன்றின் விலை இன்று (வியாழக்கிழமை) 1000 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
இதேவேளை கரட் மட்டுமன்றி, மேலும் சில மரக்கரிகளில் விலைகளும் பேலியகொடை வர்த்தக நிலையத்தில் குறைந்த விலையிலேயே இன்று விற்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க போஞ்சி ஒரு கிலோ 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும், கோவா ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தக்காளி கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு, லீக்ஸ் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, கத்திரிக்காய் ஒரு கிலோ 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.