ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடத்திய போராட்டத்தை அடக்குவதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மாத்திரம் 25 வீத சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.