கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய – கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டவர் வெலிவேரிய கெஹல்கந்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 45 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக ஹோண்டா ஃபிட் காரில் வந்த நான்கு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தெரணம கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.