மாலி, கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கமொன்று திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி குறித்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் பணிபுரிந்த 100 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய விபத்துகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.