நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டள்ள விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 549 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 289 சந்தேக நபர்களும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய குற்றங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 289 சந்தேக நபர்களில் 35 பேர் போதைப்பொருள் குற்றங்கள் குறித்து திறந்த பிடியாணை பெற்றுள்ள நிலையில் 246 பேர் ஏனைய குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விசேட சுற்றிவளைப்பின் 211 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 78 கிராம் ஐஸ் போதைப்பொருள், 16 கிலோ 600 கிராம் கஞ்சா, 9,974 கஞ்சா இலைகள் , 1,192 போதை மாத்திரைகள், 493 கிராம் மாவா போதைப்பொருள் மற்றும் 36 கிராம் மதனமோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.