சீனாவின், யுஷூயி மாவட்டத்திலுள்ள பிரபல வணிக வளாகமொன்றில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த வணிக வளாகத்தின் அடித்தளத்தில் பற்றிய தீயானது மளமளவௌ கட்டிடத்தின் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ள நிலையில் வணிக வளாகம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
இதன்காரணமாக ஏராளமான ஊழியர்களும், நுகர்வோரும் குறித்த வணிக வளாகத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.