உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலான ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.
குறித்த கப்பல் புளோரிடாவின் மியாமியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், கரீபியன் தீவுகளை 7 நாட்களுக்கு சுற்றி தனது முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டு செய்தி தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் 365 மீட்டர் நீளமும், 20 தளங்களும் கொண்டதாகவும், அதிகபட்சமாக 7,600 பயணிகள் இதில் பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியதான இந்த கப்பலில் 07 நீச்சல் தடாகங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.