பாகிஸ்தான்- பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஒரே மாதத்தில் 244 குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் புதிதாக 942 பேருக்கும், லாகூரில் 212 பேருக்கும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.