கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் எக்கோ வைத்திய நிபுணருக்கு வெற்றிடம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நோயாளர்கள் எக்கோ பரிசோதனையை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.