இணைய பாதுகாப்பு சட்டம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி வர்த்தமானி அறிவிப்பின்படி, இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகளின் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.