யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் நெல் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் இன்று அறுவடை மேற்கொள்ளபட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள குகன் குல சங்கத்தினருக்கு உரித்தான காணிமில் 60ஏக்கர் தரிசு நிலக் காணி சுழிபுரம்மேற்கு வாழ் பொதுமக்கள் ,புலம்பெயர்தேசத்தவர்கள் ,கலைமகள் விளையாட்டு கழகத்தினரால் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதியானது நெல்வயலாக மாற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் அறுவடை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புலம்பெயர் தேச உறவுகள் சார்பில் முத்தையா ஞானவேல் ,வனிதா ரவீந்திரன்,பசுமை புரட்சி திட்ட குழுவினர்களான நாராயணன் சபாரத்தினம்,சைலசுதா, கனகசபை ரவீந்திரன் ,சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினர்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.