புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டமொன்றுக்கு வட மாகாணத்தில் இருந்து 2 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், யுனிசெப்பின் நிதி அனுசரணையுடன் தரம் 8-11 வரையான மாணவர்களுக்கு எண்ணிம குடியுரிமைத் திறன்கள் கற்கைநெறியானது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குறித்த முன்னோடித் திட்டத்திற்கு ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் 2 பாடசாலைகள் வீதம் 18 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளைச் சேர்ந்த 18 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் வட மாகாணத்தில் இருந்து வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயமும், முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயமும் குறித்த திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த செயற்றிட்டமானது இந்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.