காலி – பூஸ்ஸ உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பூஸ்ஸ சிறைச்சாலையின் பழைய பிரிவிலுள்ள ஏ மற்றும் டி பிரிவுகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று அவசர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, சிறிய கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், மெமரி சிப்கள், டேட்டா கேபிள்கள் மற்றும் ஹேண்ட் ஃப்ரீ ஆகியன நிலத்திற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.